போதகர் எலியோனாய் ராழாவோனா
பாரிஸ் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தமிழ் திருச்சபையின் போதகர்
செப்டம்பர் 1, 2021 முதல் வில்னவ்-சென்-ஜார்ஜில் அமைந்துள்ள ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தமிழ் திருச்சபையின் புதிய போதகராக பணியாற்றி வருகிறேன்.
எனக்கு புதியதாக கிடைத்தவுள்ள இந்த விசுவாச குடும்பமாகிய தமிழ் திருச்சபையுடன் ஆண்டவரை சேவிப்பது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
எனது துணைவியார் ஹரித்தியானாவிற்கும் எனக்கும் ஐந்து பிள்ளைகள் உள்ளன, ஏழு பேரப்பிள்ளைகளும் உள்ளன. எங்களை சந்தோஷப்படுத்துபவர்கள் அவர்களே !
நான் 1976 ஆம் ஆண்டில் எனது இறையியல் மேற்ப்படிப்பை மொரிஷியஸ் தீவில் போனிக்ஸ் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் செமினாரில் செய்து பிரான்ஸ் தேசத்தில் கொலோன்ழ்-சு-சாலேவ் நகரத்திலுள்ள அட்வென்டிஸ்ட் இறையியல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தேன்.
1981 இல் படிப்பை முடித்து 2001 முதல் மதாகாஸ்கர், ரியூனியன் தீவு மற்றும் பிரான்ஸில் இருக்கிற பல சபைகளுக்கு போதகராக பணியாற்றியிருக்கிறேன்.
எனது ஊழிய பணியில் பல பதவிகளில் பணியாற்றியிருக்கிறேன் : மதாகாஸ்கரில் ஓர் அட்வென்டிஸ்ட் உயர்நிலைப் பள்ளியின் இயக்குனராகவும், மதாகாஸ்கரிலும் ரியூனியன் தீவிலும் இருக்கிற பிடரேஷனின் செயலாளராகவும், சில இலாக்காக்களின் தலைவராகவும், கடைசியாக போதகர்களின் சங்கத்தின் தலைவராகவும் வேலை செய்ய அரிதான வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
எனக்கு இப்பொழுது மூன்று சபைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன : தமிழ் திருச்சபை, லி-மே-சீர்-சேனின் சபை மற்றும் குளோமியேவின் சபை.
எனது ஓய்வு நேரத்தில் எனக்கு படிக்கவும் எழுதவும் பிடிக்கும். இப்படியாக மலகாசி மொழியிலும் பிரெஞ்சு மொழிலும் புத்தங்கங்கள் எழுத என்னால் முடிந்தது.
என்னை பொருத்தவரை சபை என்பது அனைவரையும் வரவேற்கும் ஓர் இடமாக இருக்க வேண்டும். ஓர் ஜெப இடமாகவும், சகோதரத்துவத்தின் இடமாகவும், தேவனின் வார்த்தையை பகிரும் ஓர் இடமாகவும் இருக்க வேண்டும் : இப்படியாக சபையில் உள்ள அனைவரும், தேவனின் அன்பினால் ஏவி, இந்த காலத்தில் வாழுபவர்களுக்கு நற்செய்தியையும் தேவனின் வார்த்தையையும் பிரசங்கிக்கும் தூதுகளாய் மாறுவார்கள்.
நாம் எங்கே இருந்தாலும் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்து தேவன், இயேசுவின் மூலம், நாம் வாழும் இந்த உலகத்தை விட மேன்மையான ஓர் உலகத்தை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை இந்த காலத்தில் வாழுபவர்கள் நம்மூலம் கண்டடைவர்களாக !